தனியார் கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கு

சின்னசேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது.

Update: 2024-05-05 08:11 GMT

சின்னசேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது.


சின்னசேலம் இதயா மகளிர் பொறியியல் கல்லுாரியில் சர்வதேச கருத்தரங்கு நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லுாரி செயலாளர் ஜான்பிரிட்டோ மேரி தலைமை தாங்கினார். முதல்வர் ஜெனிட்டா முன்னிலை வகித்தார். துணை முதல்வர் காந்திமதி வரவேற்றார். அமெரிக்காவின் மார்க் கியூட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த க்பேப்ரைஸ் காமினி, மேற்கு ஆப்பிரிக்காவின் கோசியம் பல்கலைக் கழகத்தை சேர்ந்த பிரான்ஸிஸ் கபூர், மும்பை சேவியர் பொறியியல் கல்லுாரி பேராசிரியர் வைசாலி கெய்க்வாட், தாமஸ் குவார்ட்ஸ் ஆகியோர் காணொலி காட்சி மூலம் சிறப்புரையாற்றினர். கருத்தரங்கில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. அறிக்கையை பேராசிரியர் ஜெய்சுந்தர் வாசித்தார். கருத்தரங்கில் காலத்திற்கு ஏற்ப தொழில்நுட்ப அறிவை வளர்த்து கொள்ள வேண்டும் எனவும், அது சமூக பங்களிப்புடன் உருவாக்கப்பட வேண்டும் என்று மாணவிகளிடம் எடுத்துரைக்கப்பட்டது. பயிற்சி பட்டறையை புதுச்சேரி பல்கலைக் கழக பேராசிரியர் குமரவேலன் நடத்தினார். கல்லுாரி மாணவிகள் பங்கேற்றனர். அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. பேராசிரியை சிந்துஜா நன்றி கூறினார்.
Tags:    

Similar News