ஒன்றிய திமுக சார்பில் உலக மகளிர் தின கோலப்போட்டி பரிசளிப்பு விழா
சங்ககிரி அருகே மகுடஞ்சாவடி ஒன்றிய திமுக சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கோலப்போட்டிக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது.;
Update: 2024-03-10 07:26 GMT
பரிசளிப்பு விழா
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட மகுடஞ்சாவடி ஒன்றிய திமுக சார்பில் ஏகாபுரம் பகுதியில் நடத்தப்பட்ட உலக மகளிர் தின விழா கோலப் போட்டியினை ஒன்றிய கழகச் செயலாளர் பச்சமுத்து துவக்கி வைத்து மகளிருக்கான திட்டங்களை எடுத்துரைத்து பரிசுகளை வழங்கினார். மேலும், இவ்விழாவில் ராஜா, மகாதேவன், அய்யனார் மாதையன், ராஜாகவுண்டர், இளைஞரணி பழனியப்பன், வேல்முருகன், சங்கர் கருணாகரன், துரைசாமி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.