கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் சர்வதேச யோகா தினம்

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மாணவிகள் யோகா கலைகளை செய்து அசத்தினர்.

Update: 2024-06-22 05:53 GMT

இன்று சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது, இதில் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அட்டுவம்பட்டி பகுதியில் அமைந்துள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைகழகத்தில் இன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது, இதில் பல்கலைக்கழகமும்,மத்திய மக்கள் தொடர்பகமும் இணைந்து கடந்த ஒரு வார காலமாக யோகா வகுப்புகளும் நடத்தப்பட்டது

இதனை தொடர்ந்து தாடாசனம்,வீரபத்ராசனம்,உத்தானாசனம்,திரிகோணாசனம்,அர்த்தகட்டி சக்ராசனம்,தனுராசனம் உள்ளிட்ட யோக கலைகளை மாணவிகள் செய்து அசத்தினர், மேலும் இன்று சர்வதேச யோகா தினம் என்று பிரதமர் மோடி ஐ.நா சபையில் நிறைவேற்றி பெருமை செய்துள்ளார் என்றும் இந்த யோகா கலை தமிழ்நாட்டில் இருந்து கடந்த 2500 வருடங்களுக்கு முன்பே முனிவர்களால் துவங்கப்பட்டு தற்போது பின்பற்றபடுவதாக பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கலா எடுத்துரைத்தார், மேலும் இதில் கலந்து கொண்ட 300க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது,இந்நிகழ்வில் பேராசிரியர்கள்,மாணவிகள் என அலுவலக பணியாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்...

Tags:    

Similar News