பூதலூர் அருகே நேர்காணல் முகாம்

Update: 2023-10-26 13:38 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தஞ்சாவூர் மாவட்டம்,  பூதலூர் வட்டம், திருக்காட்டுப்பள்ளி சரகம் கண்டமங்கலம் ஊராட்சி, தனியார் திருமண மண்டபத்தில், மக்கள் நேர் காணல் முகாம், மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது. திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். 

இக்கூட்டத்தில், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்விக் கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 125 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர்.  முகாமில், வருவாய் துறை சார்பில் 55 பயனாளிகளுக்கு ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா வீட்டு மனைப்பட்டா, வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில் 17 பயனாளிகளுக்கு ரூ.34 ஆயிரத்து 25 மதிப்பிலான அனைத்து விவசாய பயன்பாட்டு கருவிகள், சுகாதாரத் துறை சார்பில் 15 பயனாளிகளுக்கு ரூ.30 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்,

தொழிலாளர் நலத்துறை சார்பில் 43 பயனாளிகளுக்கு ரூபாய் 13 லட்சத்து 24 ஆயிரத்து 700 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில், 7 பயனாளிகளுக்கு ரூபாய் 14 ஆயிரத்து 700 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், மகளிர் திட்டம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் 14 பயனாளிகளுக்கு ரூ.53 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான மானிய கடனுதவிக்கான காசோலைகள் என மொத்தம் 150 பயனாளிகளுக்கு, ரூ.1 கோடியே 12 லட்சத்து 23 ஆயிரத்து 425 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.

Tags:    

Similar News