தேமுதிக பிரேமலதா பேட்டி !

கள்ளக்குறிச்சி பகுதியில் சாராயம் குடித்து, பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களை தே.மு.தி.க., பொது செயலாளர் பிரேமலதா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.;

Update: 2024-06-21 05:26 GMT

பிரேமலதா

கள்ளக்குறிச்சி பகுதியில் சாராயம் குடித்து, பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களை தே.மு.தி.க., பொது செயலாளர் பிரேமலதா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவர் கூறியதாவது; டாஸ்மாக் கடைகள், கஞ்சா புழக்கம் அதிகரித்து வருகிறது. கள்ளச்சாராயத்தால் 38 பேர் இறந்துள்ளனர். இதனால் டாஸ்மாக்கை அகற்றவேண்டும்.

டாஸ்மாக் இல்லா மாநிலமாக மாற்றவேண்டும். முதல்வர் ஆட்சிக்கு வந்தபோது போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவோம் என்றார். அது என்னாச்சு. ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளாகியும் எந்த நடவடிக்கையும் இல்லை. எல்லாமே கண் துடைப்பு நாடகமாக தான் உள்ளது. முதல்வர் ஏன் இங்கு வரவில்லை. கடந்த தேர்தலில் 40க்கு 40 என்றனர்.

Advertisement

வரும் தேர்தலில் 200க்கு மேல் என டார்கெட் என்கின்றனர். இங்கு வெறும் தேர்தல் அரசியல் மட்டுமே நடக்கிறது. மக்களுக்கு எந்த பயனுள்ள முன்னேற்றமும் இல்லை. ஓட்டுக்கு காசு கொடுப்பது, லஞ்ச, ஊழல் செய்வது, மக்களை ஏமாற்றவதே இந்த அரசின் வேலையாக உள்ளது. மக்களுக்கு பயனுள்ள எந்த முன்னேற்றத்திற்கான திட்டங்களும்.

அரசு எடுக்கவில்லை. சம்பவத்திற்கு காரணம் எனக்கூறி அதிகாரிகளை உடனே மாற்றி விடுகின்றனர். அதிகாரிகளை மாற்றினால் மாறிவிடுமா? முதலில் பலிகடாவாவது அதிகாரிகள் தான். கள்ளச்சாராயம் விற்பனனையை தடுக்க வேண்டிய முதல்வர், கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு 10 லட்சம் நிவாரணம் வழங்குவது தவறு. விக்கிரவாண்டி தேர்தலே அவர்களின் குறிக்கோள்.

Tags:    

Similar News