ஏற்காட்டிற்கு அரசு சுற்றுலா பேருந்து வசதி அறிமுகம் !!
சேலத்திலிருந்து ஏற்காட்டில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல சிறப்பு சுற்றுலா பேருந்து வசதியை போக்குவரத்து துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
By : King 24x7 Angel
Update: 2024-05-23 07:12 GMT
சேலத்திலிருந்து ஏற்காட்டில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல சிறப்பு சுற்றுலா பேருந்து வசதியை போக்குவரத்து துறை அறிமுகப்படுத்தியுள்ளது.ஏற்காட்டில் உள்ள கரடியூர் காட்சி முனை, சேர்வராயன் கோவில், மஞ்சக்குட்டை காட்சி முனை, பக்கோடா பாயிண்ட், லேடிஸ் சீட், ஜென்ட்ஸ் சீட், றோஸ் காட்டன், ஏற்காடு ஏரி, அண்ணா பூங்கா, மான் பூங்கா, தாவரவியல் தோட்டம், ஆகிய சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல ஒரு நபருக்கு பேருந்து கட்டணமாக ரூ.300/- வசூலிக்கப்படுகிறது.இன்று முதல் மே 26 வரை தினமும் காலை 8.30 மணிக்கு சேலம் புதிய பெருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் புறப்பட்டு மாலை 7.00 மணிக்கு சேலம் புதிய பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் நிறைவடையும்.பயணிகள் இந்த வசதியை, அரசு விரைவு போக்குவரத்துக் கழக முன்பதிவு மையம் வழியாகவும், www.tnstc.in மற்றும் TNSTC அதிகாரபூர்வ மொபைல் செயலி மூலமாக முன்பதிவு செய்யலாம்.