திருச்செங்கோட்டில் பாஜக வேட்பாளர் அறிமுக கூட்டம்
திருச்செங்கோட்டில் பாஜக நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது.
2047 ல் இந்தியா உலக நாடுகளுக்கு தலைமை ஏற்கும் வழிகாட்டும் நாடக திகழும் அதற்கு நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலில் 400 இடங்களை பெற்று மீண்டும் பிரதமர் மோடி பிரதமராக வருவார் அவருக்கு பக்க துணையாக பங்களிப்பாளராக நானும் இருப்பேன் திருச்செங்கோட்டில் நடந்தநாமக்கல் பாராளுமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக பாரதிய ஜனதா கட்சியில் போட்டியிடும் கே.பி. ராமலிங்கம் கலந்து கொண்ட கூட்டணி கட்சி செயல் வீரர்கள் கூட்டத்தில் பாஜக வேட்பாளர் கே பி ராமலிங்கம் பேச்சு.
நாலு எம்எல்ஏக்களை கொடுத்த தமிழகத்திற்கு மூன்று கவர்னர் பதவி ஒரு மத்திய அமைச்சர் பதவி கொடுத்தது பிரதமர் மோடி.ஒரு மத்திய அமைச்சரின் வீட்டுக்கு இரண்டு முறை வந்துபொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு விழாக்களை நடத்தியவர் பிரதமர் மோடி தமிழுக்கும் தமிழக மக்களுக்கும் தமிழர் பிரதிநிதிகளுக்கும் மரியாதை தர வேண்டும் என்பதற்காகத்தான் இதை செய்தார்.தமிழகத்தில் உள்ள தலைவர்களில் மூத்த தலைவர் மரியாதைக்குரியவர் என்பதால் தான் ராமதாஸுக்கு மிகுந்த மரியாதை தருகிறார்.2047ல் உலக நாடுகளுக்கு வழிகாட்டியாக தலைமையாக நாடாக இந்தியா திகழப்போகிறது.
இந்தியாவில் விஸ்வ குருவாக உருவாகி வரும் மோடி தான் இதனை செய்யப் போகிறார் நானூருக்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக மோடி வருவார். அவருடன் இணைந்து பணியாற்றுகிற வாய்ப்பை எனக்கு தாருங்கள் என கேட்க தான் இன்றைக்கு இந்த கூட்டம் நடைபெறுகிறது எனக் கூறினார்.
நிகழ்ச்சியில் மாநில காங்கிரஸ் மாவட்ட செயலாளர் செல்வகுமார்,அதிமுக ஒருங்கிணைப்பு குழு மாவட்ட செயலாளர் வி எஸ் எஸ் மணி, பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சுதாகர், மாவட்ட செயலாளர் நள்ளியப்பன், பாஜக மாநில நெசவாளர் அணி தலைவர் பாலமுருகன், மாவட்ட பொருளாளர் மகேஸ்வரன்,ஊடகப் பிரிவு தலைவர் ரமேஷ், மாவட்ட இளைஞரணி தலைவர் தினேஷ் குமார், ஆகியோர் உள்ளிட்ட பாஜக கூட்டணிகட்சிகளான பாட்டாளி மக்கள் கட்சி,தமிழ் மாநில காங்கிரஸ், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்,அஇஅதிமுக ஒருங்கிணைப்பு குழு, இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக் கட்சி,தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம்,உழவர் உழைப்பாளர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள்500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.