மூவலூர் இராமிர்தம் அம்மையார் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க அழைப்பு
மூவலூர் இராமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ் மாணவிகள் தங்களது ஆதார் எண்ணுடன் வங்கி கணக்கினை இணைத்து விண்ணப்பம் செய்து பயன்பெறலாம் என மாவட் ஆட்சியர் தெரிவித்துள்ளார்
விருதுநகர் மாவட்டம், அரசாணை எண்:46 சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, நாள்:02.08.2022-ன்படி மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதி திட்டமானது அரசு பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில்,
சேரும் அனைத்து மாணவிகளும் பட்டப் படிப்பு/ பட்டயப்படிப்பு/ தொழிற்கல்வி ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாதம் ரூ.1000/- ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும். இந்த மாணவிகள் ஏற்கனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம்.
அரசாணை எண்:16 சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, நாள்:11.03.2024 ன்படி மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதி திட்டமானது விரிவுபடுத்தப்பட்டு அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில்; சேரும் அனைத்து மாணவிகளும் பட்டப் படிப்பு/ பட்டயப்படிப்பு /தொழிற்கல்வி ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாதம் ரூ.1000 ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள அவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும்.
இந்த மாணவிகள் ஏற்கனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம். விருதுநகர் மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து தேர்ச்சி பெற்ற மாணவிகளின் எண்ணிக்கை-3039 ஆகும். மாணவிகள் தங்கள் ஆதார் எண்ணுடன் வங்கி கணக்கினை இணைத்து,
அனைத்து சான்றிதழ்களுடன் மேற்படிப்பை தொடரும் கல்லூரிகளில்; வழங்கி இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயனடைந்து உயர்கல்வியை பயின்று இம்மாவட்டத்தின் உயர்கல்வி சதவீதத்தை உயர்த்துவதற்கு உறுதுணையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், விபரங்களை பெற மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
விருதுநகர் மாவட்டம்.626002. தொலைபேசி எண்:04562-252701 என்ற முகவரியினை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.