மானியத்துடன் சிறுதானிய பதப்படுத்தும் மையம் அமைக்க அழைப்பு

75 சதவீத மானிய உதவியுடன் சிறுதானிய முதன்மை பதப்படுத்தும் மையம் அமைத்து பயன்பெறுமாறு தர்மபுரி மாவட்ட வேளாண் விற்பனை மற்றும் வணிகம் துணை இயக்குனர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.

Update: 2024-02-19 00:05 GMT

சிறுதானியம் பதப்படுத்தும் மையம் 

வேளாண் விற்பனை மற்றும் வணிகம் துணை இயக்குனர் கலைச்செல்வி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்தின் கீழ், சிறுதானிய முதன்மை பதப்படுத்தும் மையம் அமைக்க விருப்ப முள்ளோர் விண்ணப்பிக்க லாம். உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், உழவர் உற்பத் தியாளர் குழு, தனி நபர் வேளாண் தொழில் முனை வோர் ஆகியோர் தகுதியுடை யோர் ஆவர்.

இத்திட்டத்தின் மொத்த மதிப்பு 25 லட்சம் ஆகும். இதற்கு 75 சதவீதம் மானியமாக 18.75 லட்சம் வழங்கப்படுகிறது. இத்திட் டத்தின் கீழ், பயன்பெற ஆர்வமுள்ள விண்ணப்ப தாரர்கள் விரிவான திட்ட அறிக்கையை மாவட்ட அளவில் உள்ள வேளாண் வணிக துணை இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் முழுமையான திட்ட விவரங் களை கொண்டிருக்க வேண்டும்.தனிநபர் பொருளாதார மேம்பாட்டிற்கு ஏற்றதாக இருக்க வேண்டும்.

புதிய மையங்களை நிறுவுவதற்கு ஏஐஎப் அல்லது பிஎம்எப் எம்ஐ என்ற திட்டத்தின் கீழ், நியமிக்கப்பட்ட மாவட்ட அளவிலான ஆலோசகர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோரின் உதவியினை விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கு பெற்றுக் கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு தர்ம புரிவேளாண் விற்பனை மற் றும் வணிகம் வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.

Tags:    

Similar News