தோவாளையில் 8 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் பாதிப்பு

தோவாளை கால்வாய் திறக்கப்படாததால் 8,000 ஏக்கர் பாசன நிலங்களில் பயிர் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறியுள்ளனர்.

Update: 2024-06-13 03:33 GMT

தோவாளை கால்வாய் திறக்கப்படாததால் 8,000 ஏக்கர் பாசன நிலங்களில் பயிர் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறியுள்ளனர். 

கன்னியாகுமரி மாவட்டம் அழகிய பாண்டிபுரத்தில் இருந்து உலக்கை அருவிக்கு செல்லும் சாலையில் தோவாளை பாசன கால்வாய் செல்கிறது. சமீபத்தில் பெய்த மழையால் இந்த கால்வாயில் உடைப்பு ஏற்பட்டது. தற்போது ஒரு கோடியே 40 லட்சம் மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது.          

இந்த நிலையில் பேச்சிப்பாறை அணை ஜூன் 1ஆம் தேதி முதல் திறக்கப்பட்ட நிலையில், தோவாளை கால்வாயில் பணிகள் நடப்பதால் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதனால் இந்த பகுதியில் உள்ள சுமார் 8,000 ஏக்கர் பாசன நிலங்களும் பாதிக்கப்பட்டு உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.  

   இந்த நிலையில் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான தளவாய் சுந்தரம் அந்த பகுதியில் நேற்று பணிகளை சென்று பார்வையிட்டார்.  பின்னர் அவர் கூறுகையில், - தோவாளை கால்வாய் திறக்கப்படாததால் சுமார் 8,000 ஏக்கர் பாசன நிலங்கள் பாதிக்கப்பட்டு பயிர் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடுக்கரை பகுதியில் மட்டும் சுமார் 800 ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கூறினார்.

Tags:    

Similar News