மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கல் !
கள்ளக்குறிச்சியில் நடந்த மருத்துவ முகாமில் 152 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.;
By : King 24x7 Angel
Update: 2024-03-15 06:11 GMT
மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை
கள்ளக்குறிச்சியில் நடந்த மருத்துவ முகாமில் 152 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. கள்ளக்குறிச்சி அரசு மாவட்ட மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. எலும்பு முறிவு மருத்துவர் வெங்கடேசன், காது மூக்கு தொண்டை மருத்துவர் கணேஷ்ராஜா, கண் மருத்துவர் காயத்ரி, மனநல மருத்துவர் பாக்யராஜ், முடநீக்கியல் வல்லுனர் பிரபாகரன் ஆகியோர் முகாமில் பங்கேற்ற 152 மாற்றுத்திறனாளிகளின் உடல் பாதிப்பு, மனநலம் ஆகியன குறித்து பரிசோதனை செய்தனர். அனைவருக்கும் மருத்துவ சான்றுடன் கூடிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டையை மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்ரமணியன் வழங்கினார்.