மாற்றுத்திறனாளிகளுக்கு சட்டப்பூர்வ பாதுகாப்பு சான்று வழங்கல்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சட்டப்பூர்வ பாதுகாப்பு சான்றினை மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் வழங்கினார்.

Update: 2024-06-25 06:21 GMT

சான்றிதழ் வழங்கிய ஆட்சியர் 

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரத்தில் முதல் நாள் திங்கள் கிழமை பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறும். அதன் ஒரு பகுதியாக திருப்பூர் ஆட்சியர் கிறிஸ்துராஜ் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சட்டப்படி பாதுகாவலர் உரிமம் சான்றை வழங்கினார். உடன் மாற்றுத்திறனாளி நல அலுவலர் வசந்த்ராம்குமார் இருந்தார்.
Tags:    

Similar News