கல்வியால்தான் மகளிர் தனித்த அடையாளத்தைப் பெற முடியும்!

கல்வியால்தான் மகளிர் தனித்த அடையாளத்தைப் பெற முடியும் என்றார் கேரள மாநில முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே. சைலஜா.புதுக்கோட்டை கைக்குறிச்சியிலுள்ள ஸ்ரீ பாரதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Update: 2024-07-13 04:57 GMT

புதுக்கோட்டை

கல்வியால்தான் மகளிர் தனித்த அடையாளத்தைப் பெற முடியும் என்றார் கேரள மாநில முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே. சைலஜா.புதுக்கோட்டை கைக்குறிச்சியிலுள்ள ஸ்ரீ பாரதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் பெண்களின் அதிகாரமும், சமூக முன்னேற்றமும் என்ற தலைப்பில் அவர் மேலும் பேசியது உயர் கல்வி படிக்கும் பெண்கள் நேரடியாக அரசியலில் இறங்கவில்லை என்றாலும், அரசியலைப் பற்றி தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

மனிதநேயத்தை மாணவ சமுதாயம் கடைப்பிடிக்கமனிதநேயத்தை மாணவ சமுதாயம் கடைப்பிடிக்க வேண்டும். சமூகத்தில் மகளிருக்கு தனிப்பட்ட அடையாளம் கிடைக்க வேண்டுமென்றால், கல்வி ஒன்றால்தான் அது முடியும். அதனால் எந்தச் சூழ்நிலையிலும் கல்வியை நிறுத்தி விடாதீர்கள் என்றார் சைலஜா. கருத்தரங்குக்கு கல்விக் குழுமத் தலைவர் குரு. தனசேகரன் தலைமை வகித்தார். இயக்குநர் மா. குமுதா, முதல்வர் செ. கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாணவி ஜெ.ஹெச் சிவாந்து வரவேற்றார். 

Tags:    

Similar News