தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 3 நாட்களுக்கு வெயில் வாட்டும்
கரூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 3 நாட்களுக்கு வெயில் வாட்டும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Update: 2024-04-05 11:47 GMT
கரூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 3- நாட்களுக்கு வெயில் வாட்டும். சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. கோடை காலம் என்றாலே வெயிலின் தாக்கம் அதிகமாக அண்மைக்காலமாக இருந்து வருகிறது. இதில் தமிழகத்தில் ராய வேலூர் பகுதியில் மட்டுமே அதிகப்படியான வெயில் எப்போதுமே இருந்து வரும். அண்மைக்காலமாகவே கரூர் மாவட்டம் க.பரமத்தி சுற்றுவட்டார பகுதிகள் வேலூருக்கு இணையாக வெயில் அடித்து வருகிறது. இப்பகுதியில் அதிகப்படியாக செயல்படும் கல்குவாரிகளில் பாறையை உடைக்க வைக்கப்படும் வெடி மருந்துகளால் இந்த வெப்பத்தின் அளவு கூடி வருகிறது. இதன் அடிப்படையில் நேற்று மட்டும் கரூர் மாவட்டத்தில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இது ஏறக்குறைய 105 பாரன்ஹீட் வெப்பம் ஆகும். இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இன்னும் மூன்று நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் எனவும், குழந்தைகள், முதியவர்கள், நோய்வாய் பட்டவர்கள் காலை 11 மணிக்கு மேல் மதியம் 3 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில், பொதுவெளியில் எங்கும் செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளனர்.