துணை மேயர் வார்டில் ஐந்தாவது நாளாக அவல நிலை
தச்சநல்லூர் 1வது வார்டுக்குட்பட்ட பகுதியில் கடந்த ஐந்து நாட்களாக மழை நீர் தேங்கி உள்ளது.;
Update: 2023-12-23 08:06 GMT
தச்சநல்லூர் 1வது வார்டுக்குட்பட்ட பகுதியில் கடந்த ஐந்து நாட்களாக மழை நீர் தேங்கி உள்ளது.
நெல்லை மாநகராட்சி தச்சநல்லூர் மண்டலம் 1வது வார்டுக்குட்பட்ட சிதம்பரம் நகர் பகுதியில் கடந்த ஐந்து நாட்களாக மழை நீர் தேங்கி உள்ளது. இந்த நீரில் சாக்கடை நீரும் கலந்துள்ளதால் துர்நாற்றம் வீசி அப்பகுதி பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. இந்த வார்டானது துணை மேயர் ராஜுவின் வார்டு என்பது குறிப்பிடத்தக்கது.