நரிக்குடி அருகே ஜெ.பிறந்தநாள் பொதுக்கூட்டம்

நரிக்குடி அருகே நாலூரில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-02-27 05:46 GMT

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே நாலூர் கிராமத்தில் நரிக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் பூமிநாதன் ஏற்பாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா  76வது பிறந்தநாள் பொதுக்கூட்ட விழாவானது விருதுநகர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய விருதுநகர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் ஆர் கே ரவிச்சந்திரன், தொடர்ந்து 4 முறை திருச்சுழி சட்டமன்ற உறுப்பினராக உள்ள நிதித்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு தனது தொகுதிக்கு எந்தவித நலத்திட்டங்களையும் தற்போது வரை செய்யவில்லை. கழகப் பொதுச் செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார்  கொண்டு வந்த காவேரி- குண்டாறு - வைகை இணைப்புத் திட்டத்தை விடியா திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் கிடப்பில் போட்டது.திருச்சுழி பகுதி மக்களின் எந்தவித தேவைகளையும் அமைச்சர் தங்கம் தென்னரசு பூர்த்தி செய்யவில்லை என தெரிவித்தார்..

மேலும் காரியாபட்டி அருகே செயல்பட்டு வரும் மனித கழிவுகளை எரியூட்டும் ஆலையை ஆட்சிக்கு வந்தவுடன் மூடி விடுவோம் என வாக்குறுதி கொடுத்த தங்கம் தென்னரசு ஆட்சிக்கு வந்தவுடன் தற்போது வரை ஆலையை மூடுவதற்கு எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், விருதுநகர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News