திருட்டு வழக்கில் 3 பேருக்கு சிறை தண்டனை

திருட்டு வழக்கில் அண்ணன், தம்பி உள்பட 3 பேருக்கு 19 மாதம் சிறை தண்டனை வழங்கி சேலம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

Update: 2024-04-27 03:49 GMT

திருட்டு வழக்கில் அண்ணன், தம்பி உள்பட 3 பேருக்கு 19 மாதம் சிறை தண்டனை வழங்கி சேலம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.


சேலம் 5 ரோடு அருகே உள்ள ஒரு மருந்து விற்பனை கடையில் கடந்த 2021-ம் ஆண்டு பிப்வரி மாதம் ரூ.18 ஆயிரம் திருட்டு போனது. இதுகுறித்து அழகாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் இந்த திருட்டு தொடர்பாக மதுரை மாவட்டம் சின்னக்கடை வீதியை சேர்ந்த அசோக்குமார் ஜெயின் (வயது 52), கர்நாடக மாநிலம் மாஷல் குல்பர்கா பகுதியை சேர்ந்த விஜயகுமார் மாலிக் (43) அவரது அண்ணன் கணேஷ் மாலிக் (44) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் 5-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்றது. வழக்கில் விசாரணை அனைத்தும் முடிவடைந்ததால் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்ட அசோக்குமார் ஜெயின், விஜயகுமார் மாலிக், கணேஷ் மாலிக் ஆகியோருக்கு 19 மாதம் சிறை தண்டனையும், தலா ரூ.200 அபராதமும் விதித்து மாஜிஸ்திரேட்டு பிரவீன்குமார் தீர்ப்பு அளித்தார்.
Tags:    

Similar News