ராமநாதபுரம் மாவட்ட தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி
கீழக்கரை வட்டாச்சியர் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி முகாமில் பொதுமக்கள் வழங்கிய மனுக்களுக்கு உரிய தீர்வு வழங்கப்பட்டது.;
Update: 2024-06-14 07:04 GMT
ஜமாபந்தி முகாம்
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி முகாம் மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் பழனிக்குமார் தலைமையில் நடைபெற்றது. பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மனுக்களை வழங்கினர் .முகாமில் மனுக்கள் பெறப்பட்டு உரிய தீர்வு வழங்கப்பட்டது. இதில் கீழக்கரை வட்டாட்சியர் பழனி குமார் துணை வட்டாட்சியர் பரமசிவம் கீழக்கரை சமுக பாதுகாப்பு திட்டம் வட்டாட்சியர் சேகு ஜலாலுதீன் , தலைமையிடத்து துணை வட்டாட்சியர் மீனாட்சிசுந்தரம் , கீழக்கரை தலைமை நில அளவர் வினோத் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.