ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சராயு தலைமையில் ஜமாபந்தி

ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சராயு தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது.

Update: 2024-06-14 12:41 GMT

ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சராயு தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டத்தில் முதல் நாளாக நடைபெற்ற ஜமாபந்தியில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் M சரயு பெற்றுக்கொண்டார். வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி)14.06.2024 இருந்து 21.06.2024 வரை நடைபெற்று வருகிறது. ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் முதல் நாளாக நடைபெற்ற வருவாய் தீர்வாய நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சரயு கலந்துகொண்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்கள்.

இன்றையதினம் ஊத்தங்கரை வட்டம், பாவக்கல்,மூன்றாம்பட்டி,சின்ன தள்ளபாடி, சிங்காரப்பேட்டை,நாயக்கனூர், பெரியதள்ளப்பாடி, கோவிந்தாபுரம், நடு பட்டு, எக்கூர் ஆகிய கிராமங்களுக்கு நடைபெற்ற வருவாய் தீர்வாய நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கலந்துகொண்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற்றுக்கொண்டார்கள். தொடர்ந்து, 14.06.2024 இன்று முதல் 21.6.2024 வரை ஊத்தங்கரை வட்டார பகுதிகளில் உள்ள கிராம பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள்; நடைபெறும் வருவாய் தீர்வாயம் நிகழ்ச்சியில் வருவாய் தீர்வாய அலுவலர்களிடம் வழங்கி தங்களது கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காணலாம் என மாவட்ட ஆட்சியர் சரயு , தெரிவித்தார்கள்.

Tags:    

Similar News