நிலக்கடலை பயிர் காப்பீட்டுக்கு இன்று கடைசி நாள்

தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூபி பருவ நிலக்கடலைக்கு காப்பீடு செய்ய இன்று கடைசி நாள் என மாவட்ட ஆட்சியர் தகவலளித்தார்.

Update: 2024-01-31 00:52 GMT
நிலக்கடலை

தஞ்சாவூர் மாவட்டத்தில் ரஃபி பருவத்தில் நிலக்கடலைக்கு நாளைக்குள் (ஜன.31) பயிர்க் காப்பீடு செய்து கொள்ள வேண் டும் என மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஒரு பகுதியில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக போதிய நீர் வரத்து இல்லாமை போன்ற இயற்கை காரணிகளால் பயிர் சாகுபடி செய்ய இயலாத விவசாயிகளுக்கு 'விதைப்பு செய்ய இயலாமை என்ற இனத்தின் கீழ் பயிர்க்காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் விதைப்பு செய்ய இயலாத நிலை இனத்தின் கீழ், ஒரு ஏக்கருக்கு ரூ.9,025 என தஞ்சாவூர் மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இப்கோ- டோக்கியோ பயிர்க் காப்பீட்டு நிறுவனம் மூலம் 6,351 விவசாயி களுக்கு ரூ.3.69 கோடியும், ப்யூச்சர் ஜெனரலி நிறுவனத்தின் மூலம் 40,655 விவசாயிக ளுக்கு ரூ.18.75 கோடியும் என மொத்தம் ரூ.22.44 கோடி இழப்பீட்டுத் தொகையாக விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் ரஃபி பருவ கடலைப் பயிருக்கு பயிர் காப்பீடு செய்ய நாளை(ஜன.31) கடைசி நாளாகும். எனவே கடலை பயிரிட்ட விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.434-ஐ தொகையை இணைய சேவை மையங்களிலோ, வங்கிகளிலோ மற்றும் கூட்டுறவு சங்கங்களிலோ அணுகி விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News