மல்லிகை பூக்கள் வரத்து குறைவால் விலை உயர்வு

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை மலர் சந்தையில் பூக்கள் வரத்து குறைவால் விலை அதிகரித்து காணப்படுகிறது.

Update: 2024-06-16 11:06 GMT

பூக்கள் விலை உயர்வு

நிலக்கோட்டை மலர் சந்தையில் பூக்கள் விலை உயர்ந்து காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து மல்லிகை பூக்கள் வரத்து குறைவு காரணமாகவும் வியாபாரிகள் இடையே ஏற்பட்ட போட்டியின் காரணமாகவும் ரூ.1200க்கு விற்பனையாகி கொண்டிருந்த மல்லிகைப்பூ ரூ.1500 ஆக விற்பனையானது. இதுபோல் கனகாம்பரம் ரூ ஆயிரத்திற்கும், முல்லைப் பூ ரூபாய் 400 முதல் ரூ 500 வரையிலும், ஜாதிப்பூ (பிச்சிப்பூ)ரூ550 முதல் ரூ600 வரை விற்பனையாகிறது.
Tags:    

Similar News