துவங்கியது நாவல் பழ சீசன் - கூடை ரூ. 600 வரை விற்பனை

நத்தம் பகுதியில் நாவல் சீசன் துவங்கியதையடுத்து ஒரு கூடை ரூ.500 முதல் ரூ.600 வரை விலை போகிறது.

Update: 2024-06-26 05:36 GMT

நாவல் பழம்  

நத்தம் மற்றும் சுற்று வட்டாரத்திலுள்ள மணற்பாங்கான பகுதிகளில் விவசாயிகள் நாவல் மரங்களை வைத்து பராமரித்து வருகின்றனர். இதில் நாட்டு ரகம் விதை பெரிதாகவும், சதைப்பகுதி குறைவாகவும் இருக்கும். தற்போது சீசன் துவங்கிய தருணம் என்பதால் விலை கூடுதலாக உள்ளது. இன்னும் 20 நாட்களில் சீசன் மும்முரம் பெறும். அதன்பின் 3 படி கூடையே ரூ.300 முதல் ரூ.400 வரை விலை குறைய வாய்ப்புள்ளது. நத்தம் பகுதி நாவல் பழம் ருசி மிகுந்து காணப்படும். மேலும் மருத்துவ குணம் வாய்ந்தது என்பதாலும் அனைவரும் இங்கு வந்து விரும்பி வாங்கி செல்கின்றனர்.
Tags:    

Similar News