மேல்பூதேரி கிராமத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா
மேல்பூதேரி கிராமத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் முன்னாள் அமைச்சர் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
Update: 2024-03-14 02:20 GMT
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மேல்பூதேரி கிராமத்தில்ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகளை அதிமுக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தூசி கே.மோகன் முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் வழங்கினர். நிகழ்வில் வெம்பாக்கம் ஓன்றிய செயலாளர்கள் ராமநாதன், திருமூலன் மாவட்ட பொருளாளர் சுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.