ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு கோலப்போட்டி
கோலப்போட்டியினை பார்வையிட்ட முன்னாள் அரசு கொறடா;
Update: 2024-02-23 15:39 GMT
கோலப்போட்டி
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா நாளை கொண்டாடபடுகிறது. இதனை முன்னிட்டு அரியலூர் மாவட்டம் தாமரைக்குளம் கிராமத்தில் கோலப்போட்டி இன்று நடைப்பெற்றது. இதில் எம்ஜிஆர், ஜெயலலிதா உருவபடம், இரட்டை இலை சின்னம், அதிமுக சாதனைகள் உள்ளிட்டவைகளை கோலமிட்டனர். இதனை அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அரசு கொறடாவுமான தாமரை. இராஜேந்திரன் நேரில் பார்வையிட்டார். பின்னர் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இதில் தாமரைக்குளம் ஊராட்சிமன்ற தலைவர் பிரேம்குமார் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.