செய்யாறு நகர அதிமுக சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா

செய்யாறு நகர அதிமுக சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா நகர செயலாளர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது

Update: 2024-02-24 15:51 GMT

ஜெயலலிதா பிறந்த நாள் கொண்டாட்டம் 

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் ஆரணி கூட்ரோட்டில் உள்ள எம்ஜிஆர் சிலை அருகே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா நிகழ்ச்சிக்கு செய்யாறு முன்னாள் எம் எல் ஏ குப்புசாமி மகன் கே. வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாராக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தூசி கே மோகன் கலந்து கொண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் நகர நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News