ஜெயங்கொண்டம் : கூலித்தொழிலாளி போக்சோவில் கைது.

ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து தலைமறைவாக இருந்த கூலித்தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.;

Update: 2024-05-10 07:28 GMT
போக்சோவில் கைது செய்யப்பட்ட மணிகண்டன்

 அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஆமணக்கந்தோண்டி கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணியன். இவரது மகன் மணிகண்டன் (21).( படிப்பு ஐடிஐ ) கூலி தொழில் செய்து வருகிறார். இவர்  இவரது  உறவினரின்  15 வயது மகளை கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.மேலும் அந்த சிறுமியிடம்  திருமண செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் சிறுமி 4 மாத கர்ப்பிணியனார் .இந்த தகவல் தெரிந்து அவரது தாயார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்து போது  கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

இது குறித்து மகளிடம் கேட்டபோது நடந்ததை கூறியுள்ளார்.அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் மணிகண்டனிடம் கேட்டபோது விஷயம் தெரிந்ததை அறிந்த  தலைமறைவாகிவிட்டார். இதுகுறித்து சிறுமியின் தாய் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் பல்வேறு இடங்களில் போலீசார் தேடி விசாரித்து வந்தனர். இருப்பினும் அவர் கிடைக்கவில்லை இரண்டு மாதத்திற்கு பிறகு தலைமறைவாக இருந்த மணிகண்டனை நேற்று அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் லட்சுமிபிரியா.போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News