நடந்து சென்ற மூதாட்டி மீது ஜேசிபி மோதி விபத்து !

ரெங்கராஜ் நகரில் நடந்து சென்ற மூதாட்டி மீது ஜேசிபி மோதி விபத்து ஏற்பட்டது.

Update: 2024-07-16 06:23 GMT

விபத்து

ரெங்கராஜ் நகரில் நடந்து சென்ற மூதாட்டி மீது ஜேசிபி மோதி விபத்து. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, பள்ளப்பட்டி அருகே உள்ள ரெங்கராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் மனைவி இந்திராணி வயது 60. இவர் ஜூலை 11ஆம் தேதி இரவு 8 மணி அளவில், பள்ளப்பட்டியில் இருந்து கரூர் செல்லும் சாலையில் ரங்கராஜ் நகர் பகுதியில் உள்ள இந்திராணி வீட்டின் அருகில் நடந்துசென்று கொண்டிருந்தார்.

அப்போது புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள காட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த ரவிசங்கர் வயது 24 என்பவர் வேகமாக ஓட்டி வந்த ஜேசிபி வாகனம் நடந்து சென்ற இந்திராணி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயம் அடைந்த இந்திராணியை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவம் அறிந்த இந்திராணியின் மகன் அசோக்ராஜ் வயது 32 என்பவர், அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், ஜேசிபி வாகனத்தை வேகமாகவும், கவனக்குறைவாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய ரவிசங்கர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.

Tags:    

Similar News