சேலத்தில் பாஜக நிர்வாகி வீட்டில் நகை திருட்டு
சிவராத்திரி விழாவுக்கு சென்ற போது சேலத்தில் பாஜக நிர்வாகி வீட்டில் நகை திருட்டு.;
Update: 2024-03-10 18:13 GMT
திருட்டு
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகேயுள்ள பேளூர் ஈஸ்வரன் கோயில் பின்புறம் வசித்து வருபவர் மதன்குமார் (28), பாஜ இளைஞரணி துணைச்செயலாளர். இவர் நேற்று முன்தினம் சிவராத்திரி விழா என்பதால், வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் அருகில் உள்ள பேளூர் ஈஸ்வரன் கோயிலுக்கு சென்றார். நேற்று அதிகாலை 1.30 மணியளவில் வீட்டிற்கு மதன்குமார் திரும்பினார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்துள்ளது. உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 5 பவுன் நகை திருடு போயிருந்தது. உடனே வாழப்பாடி போலீசில் மதன்குமார் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாஸ்கரபாபு தலைமையிலான போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர். அதில் மதன்குமார், வீட்டை பூட்டிவிட்டு செல்லும் போது சாவியை வெளியேயுள்ள மின்சார மீட்டர் மேல்பகுதியில் வைத்துவிட்டு சென்றுள்ளார். அதனை எடுத்த மர்மநபர்கள், பூட்டை திறந்து உள்ளே புகுந்து நகையை திருடிச் சென்றுள்ளனர் எனத்தெரிய வந்தது.தெரிந்த நபர்களே ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகம் கொண்டுள்ளனர். இச் சம்பவத்தில் 2 அல்லது 3 பேர் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகம் கொண்டுள்ளனர். அது தொடர்பாக தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.