பெண்ணிடம் நகை வழிப்பறி
ஆண்டிபட்டியில் நடை பயிற்சி சென்ற பெண்ணிடம் மர்ம நபர்கள் நகை பறித்து சென்றனர்.;
Update: 2024-05-28 14:18 GMT
ஆண்டிபட்டியில் நடை பயிற்சி சென்ற பெண்ணிடம் மர்ம நபர்கள் நகை பறித்து சென்றனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி கொண்டமநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பூமாதேவி .இவர் நேற்று முன்தினம் மாலை ஆண்டிபட்டி மேக்லார்பட்டி ரோட்டில் நடை பயிற்சி சென்றார் அப்போது 25 வயது மதிக்கத்தக்க இருவர் பூமாதேவி வழிமறித்து அவரது வாயை பொத்தி அவர் கழுத்தில் இருந்த நான்கரை பவுன் தாலி செயினை பறித்து சென்றனர் இதுகுறித்து ஆண்டிபட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்