திருமருகலில் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு நகை தயாரிப்பு பயிற்சி

திருமருகலில் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு செயற்கை நகை தயாரிப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.;

Update: 2023-12-24 14:40 GMT

நகை பயிற்சியில் கலந்து கொண்ட மகளிர் குழுவினர்

திருமருகலில் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு செயற்கை நகை தயாரிப்பு பயிற்சி திருமருகல் வட்டாரத்தில் சீடு தொண்டு நிறுவனத்தின் சார்பில் செயற்கை நகை தயாரிப்பு பயிற்சி அண்மையில் நடைபெற்றது.

தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி நபார்டு வங்கி உதவியுடன் செயற்கை நகை தயாரிப்பு பயிற்சி மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு 15 நாள் நடைபெற உள்ளது.பயிற்சிக்கு நபார்டு வங்கியின் தலைமை பொது மேலாளர் சங்கரநாராயணன் தலைமை வகித்து மரக்கன்றுகளை நட்டு வைத்து பயிற்சியை துவங்கி வைத்தார்.

Advertisement

நபார்டு வங்கியில் மாவட்ட வளர்ச்சி மேலாளர் விஸ்வந்த் கண்ணா நபார்டு வங்கியின் திட்டத்தை பற்றி விளக்கினார்.இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முன்னோடி வங்கி மேலாளர் செந்தில்குமார், தாட்கோ மாவட்ட மேலாளர் சக்திவேல்,இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாளர் கார்த்திகேயன், தமிழ்நாடு கால்நடை மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் மருத்துவர் சுரேஷ் ,ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் பயிற்சியாளர் நிஷாந்தினி மகளிர் குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தார். முடிவில் சீடு தொண்டு நிறுவனத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் நன்றி கூறினார்.

Tags:    

Similar News