வானூர் அருகே விவசாயி வீட்டில் நகை கொள்ளை
வானூர் அருகே விவசாயி வீட்டில் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த கிளியனூர் அருகே உள்ள உப்புவேலூர் கிராம ஓடை தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ் என்பவரது மகன் கிருஷ்ணமூர்த்தி வயது 30, இவர் விவசாய தொழில் செய்து வருகிறார், இவர் வழக்கம் போல் தனது பணிகளை முடித்துவிட்டு நேற்று இரவு வீட்டில் உறங்கிக் கொண்டு இருந்துள்ளார்.
அப்போது நள்ளிரவு 12.30 மணியளவில் அடையாளம் தெரியாது மர்ம நபர்கள் 3 பேர் திடீரென வீட்டிற்குள் புகுந்து கிருஷ்ணமூர்த்தியை பயங்கர ஆயுதங்களால் தாக்கிவிட்டு அவரது மனைவி கழுத்தில் அணிந்திருந்த தாலி சரடை அறுத்துச் சென்றுள்ளனர் இதனையடுத்து அவரது மனைவி கூச்சலிடவே அருகாமையில் இருந்த அவரது கைப்பை ஆகியவற்றை வெளியே எடுத்துச் சென்று அதிலிருந்து பணத்தையும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்,
இதனை அடுத்து செய்வதறியாமல் வலியில் துடித்த கிருஷ்ணமூர்த்தி உடனடியாக கிளியனூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார், இந்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் திருட்டுச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், மேலும் விழுப்புரத்திலிருந்து மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை
சேகரிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர் திருடு போன தாலிசரடின் மதிப்பு 1.50 லட்சம் மதிப்பு இருக்கும் என தெரிவிக்கின்றனர், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த விவசாயியை தாக்கி செயின் பறிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.