நகை கடையில் கொள்ளை - ஊழியர்கள் கைது
கன்னியாகுமரியில் உள்ள நகைக்கடையில் ஊழியர்கள் கொள்ளையடித்த 56 பவுன் தங்கம், 6 கிலோ வெள்ளி நகைகளை காவல்துறையினர் மீட்டனர்;
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பம்மம் பகுதியில் ஒரு பிரபல நகைக்கடை உள்ளது. அந்த கடையில் கடந்த 28ஆம் தேதி உரிமையாளர் நகைகளை சோதனையிட்ட போது, நகைகளின் இருப்பு குறைவாக இருந்ததை கண்டுபிடித்தார். கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, அங்கு வேலை பார்க்கும் அருமனை பகுதி அனீஸ் (29) என்பவர் நகையை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
இது தொடர்பாக கடை உரிமையாளர் மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். போலீசார் அனிசை படித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அனீஸ் அந்த கடையில் உள்ள சக ஊழியர்களான மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த ஷாஜினி (28), அபிஷா (25) ஆகிய இரண்டு பெண்களை இவர் பயன்படுத்தி திருடி உள்ளார். அதாவது ஆடிட்டிங் செய்யும்போது நகைகள் இருப்பு குறையாமல் இருப்பதாக கணக்கு காட்டும்படி இந்த பெண் ஊழியர்களை பயன்படுத்தி உள்ளார்.
பின்னர் போலீசார் அவர்களிடமிருந்து 54 பவுன் தங்க நகைகள் 6 கிலோ வெள்ளியையும் மீட்டனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து அனிஷ், ஷாஜினி, அபிஷா ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.