ஜெயங்கொண்டம்: குடிபோதையில் பேருந்து கண்ணாடி உடைப்பு - 4 பேர் கைது
ஜெயங்கொண்டம் அருகே குடிபோதையில் அரசு பஸ் கண்ணாடி மற்றும் டிரைவர்,கண்டக்டரின் செல்போனை உடைத்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்திலிருந்து கும்பகோணம் நோக்கி அரசு பஸ்சை ஓட்டுநர் கடலூர் மாவட்டம் ஆனந்தகுடி கிராமம் மேட்டு தெருவை சேர்ந்த ராஜ்குமார் (32) என்பவர் ஓட்ட நடத்துனர் அழகாபுரம் மேலத்தைச் தெருவை சேர்ந்த சுசேந்திரன் (33) டிக்கெட் போட சுமார் பஸ்ஸில் அறுபதுக்கு மேற்பட்டோர் பயணித்துக் கொண்டிருந்தனர் அப்போது உத்திரக்குடி கிராமம் அருகே சென்றபோது பஸ் நிறுத்தத்தில் அருகே சாலையின் குறுக்கே ஒருவர் குடிபோதையில் நின்று கொண்டு பஸ்ஸை நிறுத்தி உள்ளார்
.பஸ் நிற்காமல் சென்றதால் பஸ்ஸில் பின்பக்க கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்துள்ளனர். இதில்.பேருந்தில் பயணித்த பயணிகளில் ஒருவரான இடங்கண்ணி கிராமத்தைச் சேர்ந்த அருள் என்பவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்ற பயணிகள் காயம் ஏதும் இல்லாமல் உயிர் தப்பினர்.கண்ணாடி உடைத்தவர்களை யார்? எனறு பார்க்க இறங்கிய பஸ் டிரைவர் கண்டக்டரை நான்கு பேர் கொண்ட கும்பல் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதுடன் டிரைவர் மற்றும் கண்டக்டர் வீடியோ எடுத்த 2 பேரின் இரண்டு செல்போன்களையும் பிடுங்கி ரோட்டில் அடித்து உடைத்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பஸ் டிரைவர் கண்டக்டர் இடம் தகராறு ஈடுபட்ட நான்கு பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில் அவர்கள் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த ரெங்கர் தெருவை சேர்ந்த ஸ்ரீதர் மகன் கலைபாரத் (22), பரமசிவம் மகன் மணிகண்டன் (22), செல்வராஜ் மகன் சத்யராஜ் (எ) ஜான் (23) பிறையின் மகன் நாகராஜன் (21)என்பதும் விசாரணையில் தெரியவந்தது இதை எடுத்து போலீசார் நான்கு பேர் மீதும் வழக்கு பதிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.பஸ் கண்ணாடி உடைத்த நான்கு பேர் மீதும் கும்பகோணம் போலீஸ் நிலையத்தில் அடிதடி பிரச்சனை சம்பந்தமாக வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.