45 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு - ப.சிதம்பரம்

இந்தியா முழுவதும் 45 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தரப்படும் என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசினார்.

Update: 2024-04-18 03:59 GMT

இந்தியா முழுவதும் 45 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தரப்படும் என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசினார். 

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் சிவகங்கை நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரத்திற்கு ஆதரவு தெரிவித்து அவரது தந்தையும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, பாஜக ஆட்சியில் எந்த பொருள்களின் விலையும் குறைந்தது இல்லை. பாஜக ஆட்சியில் வேலை இல்லை என்ற குரல் எட்டுத்திக்கும் கேட்கிறது. மோடி அரசு இருந்தால் வேலையின்மையை ஒழிக்க முடியாது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதியின் படி ஒரு திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 45 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

எனவே, பத்தாண்டுகள் கழித்து அதிமுக அரசை அனுப்பிவிட்டு, திமுக அரசை கொண்டு வந்ததை போல, பத்தாண்டு ஆட்சி செய்த பாஜக அரசுக்கு விடை அளித்து, இந்தியா கூட்டணி அரசை கொண்டு வாருங்கள் என பேசினார்

Tags:    

Similar News