வளாகத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு பணி ஆணை!
குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் டிவிஎஸ் தொழிற்சாலை சார்பில் நடந்த வளாகத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.;
By : King 24x7 Angel
Update: 2024-07-06 06:14 GMT

பணி ஆணை
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் டி.வி.எஸ். தொழிற்சாலை சார்பில் நடந்த வளாகத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) வாசுகி தலைமை தாங்கினார். கணிதத்துறை தலைவர் செ.கருணாநிதி வரவேற்றார். விலங்கியல் துறை தலைவர் வ.க.சிவக்குமார், இயற்பிலை துறை தலைவர் அ.தாமரை, பேராசிரியர் விக்ரமன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். டி.வி.எஸ். குழுமங்களின் தொழில் முனைவு அலுவலர் குபேந்திரன் தேர்வு செய்யப்பட்ட 50 மாணவிகளுக்கு பணி ஆணைகளை வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை பணி அமர்வு அலுவலரும், கல்லூரியின் வேதியியல் துறை தலைவருமான அ.தமினும்அன்சாரி செய்திருந்தார்.