கிராம டேங் ஆப்ரேட்டர்களுக்கு பணி நிரந்தரம் - ஐக்கிய தொழிற்சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

கிராம டேங் ஆப்ரேட்டர்களுக்கு பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் நாமக்கல்லில் நடைபெற்ற ஐக்கிய தொழிற்சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

Update: 2024-02-25 05:40 GMT
நாமக்கல் ,கே.பி.ஆர் திருமண மண்டபத்தில் ஐக்கிய தொழிற்சங்கத்தின் செயற்குழு கூட்டம் நாமக்கல் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. செயற்குழு கூட்டத்தில் மாநில தலைவர் முருகேசன், மாநில பொது செயலாளர் ராஜேஸ்வரன் முன்னிலை வகித்து பேசினர். கூட்டத்தில் சாலையோரத்தில் சிறு கடைகள் வைத்து தொழில் நடத்தி வரும் தொழிலாளர்களுக்கு நிரந்தரமாக இடம் கிடைக்கச் செய்வது, அரசின் நலவாரிய திட்டங்கள் அனைத்து மக்களுக்கும் கிடைக்கச் செய்வதும், தொழிலாளர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு அரசு மூலமாக தீர்வு காண்பது, தூய்மை பணியாளர்கள் மற்றும் கிராம டேங் ஆப்ரேட்டர்களுக்கு பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும், மற்றும் கட்டுமான பொருட்களின் விலை உயர்வை மத்திய மாநில அரசுகள் கட்டுபடுத்த வேண்டும் கட்டுமான பொருட்களின் விலை உயர்வால் கட்டுமான தொழிலாளர்கள் வேலை இழப்பு ஏற்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த செயற்குழு கூட்டத்தில் ஈரோடு மாவட்ட செயலாளர் சகுந்தலா, மாவட்ட தலைவர் ரகுபதி,துணை தலைவர்கள் கோபால் சாமி, மணிகண்டன், மாவட்ட துணை செயலாளர்கள் பாலசுப்ரமணியன், நாகராஜன்,மாவட்ட பொருளாளர் அர்ச்சனா பாலசுப்ரமணி, ராசிபுரம் நகர தலைவர் கந்தசாமி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கமலகண்ணன், செயற்குழு உறுப்பினர்கள் சரவணன், இலியாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News