ஜான் சலிவன் நினைவு நாள் - மாலை அணிவித்து மரியாதை

ஜான் சலிவனின் நினைவு நாளையொட்டி உதகையில் உள்ள அவரது உருவ சிலைக்கு வனத்துறை அமைச்சர் ராமசந்திரன், மாவட்ட ஆட்சியர் அருணா உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

Update: 2024-01-16 08:40 GMT

ஜான் சலிவனுக்கு மரியாதை

நீலகிரி மாவட்டத்தை முதன் முதலாக வெளி உலகத்திற்கு அறிமுகபடுத்தியவர் ஜான் சலிவன். 1788-ம் ஆண்டு ஜீன் 15-ம் நாள் லண்டனில் பிறந்த இவர் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஈஸ்ட் இந்திய கம்பெனியில் சிவில் சர்விசில் பணிபுரிந்து வந்தார். பின்னர் 1814-ம் ஆண்டு செங்கல்பட்டு கலெக்டராக பணியாற்றிய அவர் 1815-ம் ஆண்டு கோவை மாகாண கலெக்டராக மாற்றப்பட்டார். இதனையடுத்து அவர் 1821-ம் ஆண்டு குதிரையின் மூலம் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கண்ணேரி மூக்கு பகுதிக்கு வந்தார். பின்னர் அவர் தங்க முதன் முதலில் கட்டிடம் ஒன்றையும் கட்டினார். அதில் தங்கி ஜான் சலிவன் நீலகிரி மாவட்டம் முழுவதையும் கண்டுபிடித்ததுடன் வெளி உலகிற்கும் அறிமுகம் செய்து வைத்தார்.இவர் 1855-ம் ஆண்டு இயற்கை எய்தினார். இந்த நிலையில் இன்று ஜான் சிலிவனின் 169-வது நினைவு நாள் என்பதனால் உதகை உள்ள அவரது உருவ சிலைக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் ராமசந்திரன், மாவட்ட ஆட்சியர் அருணா, அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Tags:    

Similar News