மீண்டும் பாஜக வந்தால் நூறு நாள் வேலை திட்டம் இருக்காது காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி பேச்சு
விராலிமலையில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி மணி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
விராலிமலை கரூர் லோக்சபா தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி விராலிமலை ஒன்றியம் கோங்குடிபட்டி, நீர் பழனி, நடுப்பட்டி, பாலாண்டபட்டி, மாத்தூர், ஆவூர், கத்தலூர், வேலூர், வடுகப்பட்டி, தென்னம்பாடி உள்பட 32 ஊராட்சிகளில் பிரச்சாரம் செய்து ஓட்டு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில் 100 நாள் வேலை திட்டத்தை காங்கிரஸ் கட்சி தான் கொண்டு வந்தது 15 நாளுக்கு ஒருமுறை வேலை செய்யும் இடத்தில் பணத்தை கொடுத்தோம்.
இப்போது பிரதமராக மோடி வந்த பின்னர் 100 நாள் சம்பளம் முறையாக வருகிறதா மோடி மீண்டும் வந்தால் 100 நாள் வேலையை முடித்துவிடுவார். ஆளும் கட்சி சிலிண்டரின் விலையை உயர்த்தி விட்டது. விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றால் கை சின்னம் வரவேண்டும்.
விராலிமலை தொகுதியில் கொடும்பாளூர் மேலபச்சகுடி ஆகிய இடங்களில் மேம்பாலம் கொண்டு வந்துள்ளேன். மேலும் வடுகப்பட்டி கீரனூரில் மேம்பாலம் அமைக்கப்படும். எனக்கு குடும்பம் கிடையாது மக்கள் தான் எனது குடும்பம் அர்ப்பணிப்புடன் வேலை பார்த்து வருகிறேன். நரேந்திர மோடி ஆட்சியை அகற்றுவதற்கும் ஸ்டாலின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கும் ராகுல் பிரதமராவதற்கும் கை சின்னத்துக்கு ஓட்டளிக்க வேண்டும் என்றார்.
காங்கிரஸ் மாவட்ட தலைவர் முருகேசன் ஒன்றிய செயலாளர் சத்தியசீலன் ஐயப்பன் மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் தென்னலூர் பழனியப்பன் மற்றும் கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர்.