தஞ்சையில் கே.பக்கிரிசாமி நூல் வெளியீட்டு விழா 

தஞ்சையில் கே.பக்கிரிசாமி நூல் வெளியீட்டு விழா 

Update: 2024-06-03 07:08 GMT

நூல் வெளியீட்டு விழா 

தஞ்சாவூரில் பெசன்ட் லாட்ஜில், சனிக்கிழமை மாலை, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் தஞ்சை கே.பக்கிரிசாமி எழுதிய, "தஞ்சை மாவட்ட செங்கொடி இயக்க வீர காவியம்", "களம் கண்ட வேங்கைகள்", "சனாதன தர்மம் என்றால் என்ன?", "அறிவோம் காவிரியின் அரசியல் வரலாறு" என்ற நான்கு நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.வாசு நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஆர். முத்தரசன், மாநில துணைச் செயலாளர் வீரபாண்டியன், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான ஏ.லாசர்,  அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநிலத் தலைவரும், கந்தர்வகோட்டை எம்எல்ஏவுமான எம்.சின்னத்துரை, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி. நடராஜன், வி.தொ.ச மாநில பொதுச் செயலாளர் வி.அமிர்தலிங்கம், மாநிலச் செயலாளர் வி.மாரியப்பன், அம்மாபேட்டை ஒன்றிய பெருந்தலைவர்  வி.கலைச்செல்வன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், சிபிஐ மாவட்டச் செயலாளர் முத்து. உத்திராபதி, வழக்குரைஞர் வெ.ஜீவகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். நிறைவாக நூலாசிரியர் கே.பக்கிரிசாமி ஏற்புரையாற்றினார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள், பல்வேறு அரங்கங்களின் செயலாளர்கள், வி.தொ.ச நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். வீரா பதிப்பகம் ச.வீரமணி, மரு அன்பழகன், ஆர்.எஸ்.வேலுச்சாமி, அம்மாபேட்டை ஒன்றிய பெருந்தலைவர்  வி.கலைச்செல்வன் உள்ளிட்டோர் விழாவில் பாராட்டப்பட்டனர்.
Tags:    

Similar News