கடவூர் - கரூர் புதிய பேருந்து : துவக்கி வைத்த எம்.எல்.ஏ

கடவூரில் இருந்து கரூருக்கு செல்லும் புதிய பேருந்தை எம்.எல்.ஏ சிவகாமசுந்தரி துவக்கி வைத்தார்.;

Update: 2024-03-07 00:43 GMT

கரூர் மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ளது கடவூர் பகுதியாகும். விவசாயத் தொழிலை பிரதானமாகக் கொண்ட மிகவும் பின்தங்கிய பகுதி ஆகும். இதனால், பெரும்பாலான பொதுமக்கள் வேலை தேடி கடவூரிலிருந்து கரூருக்கு வந்து செல்கின்றனர். ஆயினும், இவர்களுக்கு பேருந்து வசதி முறையாக இல்லாததால் அவதிப்பட்டு வந்தனர். தங்கள் பகுதியிலிருந்து கரூருக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என எம்எல்ஏவிடம் கோரிக்கை விடுத்தனர்

Advertisement

அப்பகுதி பொதுமக்கள். கோரிக்கையை ஏற்று கடவூர் பகுதியில் இருந்து கரூருக்கு புதிய பேருந்து வழித்தடத்தில் பேருந்தை துவக்கி வைத்தார் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி. மேலும், முதல் பயணிக்கான டிக்கெட்டை பெற்றுக் கொண்டு கரூருக்கு பேருந்தை அனுப்பி வைத்தார் எம் எல் ஏ சிவகாமசுந்தரி. இந்த நிகழ்ச்சியில், கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளர் சுதாகர், இளைஞர் அணி அமைப்பாளர் கரிகாலன், துணை அமைப்பாளர் சீனி பெருமாள், கட்சி நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டு பேருந்து துவக்க விழாவை சிறப்பித்தனர்.

Tags:    

Similar News