கலைஞர் 101 : விருதுநகரில் கோலாகலம்

விருதுநகரில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் 101வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திமுக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Update: 2024-06-04 01:05 GMT

கலைஞர்  பிறந்த நாள் விழா

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின்  நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் 101வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் இளைஞர் அணி அமைப்பாளர் கிருஷ்ணகுமார் ஏற்பாட்டில் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பாக அசைவு உணவு வழங்கப்பட்டது. இதனை விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன் கலந்துகொண்டு 1000க்கும் பொதுமக்களுக்கு அசைவ உணவை வழங்கினார். அதனைத் தொடர்ந்து இளைஞர் அணி சார்பில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பாக மரக்கன்று நடப்பட்டது இந்த நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் தனபாலன் இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் ஜெகன் கார்த்திக் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் இளைஞர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். 

 அதனைத் தொடர்ந்து விருதுநகர் போக்குவரத்து பணிமனை முன்பாக முத்தமிழ் அறிஞர் டாக்டர் 101 வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக விருதுநகர் தெ மு சா மண்டல செயலாளர் ராஜாசெல்வம் ஏற்பாட்டில் கலைஞரின் திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது பின்னர் அங்கிருந்த பொது மக்களுக்கு பேனா மற்றும் இனிப்புகளை வழங்கினார். 

Tags:    

Similar News