ஊத்தங்கரையில் கலைஞரின் 101 வது பிறந்தநாள் விழா!

ஊத்தங்கரையில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 101 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2024-06-03 14:40 GMT

ஊத்தங்கரையில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 101 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.


கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் முத்தமிழ் அறிஞர் டாக்டர். கலைஞர் அவர்களின் 101 வது பிறந்தநாள் விழா!! தமிழக முதல்வர் மு. க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 100 வது பிறந்தநாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி கிழக்கு திமுக மாவட்ட செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே. மதியழகன் எம். எல். ஏ அவர்கள் அறிவுறுத்தலின்படி கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வெங்கடதாம் பட்டி ஊராட்சி காந்திநகரில் முத்தமிழ் அறிஞர் டாக்டர். கலைஞர் அவர்களின் படத்திற்கும் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

நிகழ்ச்சியில் ஊத்தங்கரை வடக்கு ஒன்றிய செயலாளர் குமரேசன் முன்னாள் எம்எல்ஏ கிருஷ்ணமூர்த்தி மாவட்ட பிரதிநிதி காமராஜ் அவை தலைவர் தணிகை குமரன் துணைச் செயலாளர் ஜெயச்சந்திர பாண்டியன் விவசாய அணி சத்திய நாராயணன் பாப்பனூர் சங்கர் ராமச்சந்திரன் துறிஞ்சிப்பட்டி கோவிந்தராஜ் , உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர கிளை கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு. சிறப்பித்தனர்

Tags:    

Similar News