திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா
Update: 2023-11-15 05:44 GMT
செய்யாறில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா நடந்தது. செய்யாறு தனியார் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கு இடையேயான கலைஞரின் கவிதைகள், திரைப்பட வசனங்கள் ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது. போட்டியினை திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தரணி வேந்தன் துவக்கி வைத்தார். எம் எல் ஏ ஒ.ஜோதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். மாவட்ட அமைப்பாளர் மணிவண்ணன் தலைமைதாங்கினார். சேகர், செல்வ குமார்,கருணாநிதி,செந்தில் குமார்,கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் லோகநாதன், பொதுக்குழு உறுப்பினர்கள் மோகனவேல், வெங்கடேஷ் பாபு,முன்னாள் எம்எல்ஏக்கள் எதிரொலி மணியன், கமலக்கண்ணன், ஒன்றிய செயலாளர்கள் சீனிவாசன், நகர செயலாளர் விஸ்நாதன்,சங்கர், ஞானவேல், தினகரன், ரவிக்குமார் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .செய்யாறு, வந்தவாசி, ஆரணி, போளூர் தொகுதிக்குட்பட்ட தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்று பேசினர். போட்டி நடுவர்கள் நியமித்து போட்டிகள் நடத்தப்பட்டது. மாணவர்கள்,ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.முடிவில் சீனிவாசன் நன்றி கூறினார்.