கலைஞர் நூற்றாண்டு விழா - நலத்திட்ட உதவி வழங்கிய திமுகவினர்
கலைஞர் நூற்றாண்டு விழா நிறைவையொட்டி நெல்லை காது கேளாதோர் வாய்பேச முடியாதோர் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் மைதீன்கான் வழங்கினார்.
Update: 2024-06-26 08:34 GMT
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101வது பிறந்த தினத்தை முன்னிட்டு ஐக்கிய அரபு அமீரக வெளிநாடு வாழ் தமிழர்கள் நல வாரிய உறுப்பினர் துபாய் மீரான் ஏற்பாட்டில் நெல்லை காது கேளாதோர் வாய்பேச முடியாதோர் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நேற்று (ஜூன் 25) மாலை நடைபெற்றது.இதில் திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் மைதீன்கான் கலந்து கொண்டு உதவிகளை வழங்கினார். இதில் திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.