கள்ளக்குறிச்சி சாராய உயிரிழப்புகள் : சேலத்தில் மேலும் இருவர் பலி

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவர் உயிரிழந்தனர். இதனால் சேலம் அரசு மருத்துவமனையில் பலியானவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது

Update: 2024-06-24 04:25 GMT

உயிரிழந்த மதன்

கள்ளக்குறிச்சி கருணாபுரம் மற்றும் மாதவச்சேரியை சுற்றி யுள்ள பகுதியில் கடந்த 18-ந் தேதி நள்ளிரவு முதல் விடிய, விடிய விற்கப்பட்ட சாராயத்தை வாங்கி 150-க்கும் மேற்பட்டோர் குடித்தனர். அந்த சாராயத்தில் அதிக போதைக்காக மெத்தனால் கலந்திருந்ததால் விஷமாக மாறியது. இதனால் அதை குடித்தவர்களுக்கு கண் எரிச்சல், வயிற்று வலி உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டது.

இதையடுத்து அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் அரசு மருத்துவக்கல்லூாி மருத்துவமனைகள் மற்றும் புதுச்சோி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதில் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கடந்த 19-ந் தேதி 17 பேரும், 20-ந் தேதி 24 பேரும், 21-ந் தேதி 9 பேரும், நேற்று முன்தினம் 5 பேரும் என மொத்தம் 55 போ் உயிாிழந்தனா்.

இந்த நிலையில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கருணாபுரத்தை சோ்ந்த சவுந்தரராஜன் மகன் மதன் (வயது 46) என்பவா் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிாிழந்தாா். தொடர்ந்து பகலில் ஷேசசமுத்திரத்தை சேர்ந்த சாமுண்டி (70) என்பவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதன் மூலம் விஷ சாராயம் குடித்து இறந்தவா்களின் எண்ணிக்கை 57 ஆக உயா்ந்துள்ளது. அதே நேரத்தில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் இந்த சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News