கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம்:சேலத்தில் அதிமுக ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தை கண்டித்து சேலத்தில் அதிமுக சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.;

Update: 2024-06-23 16:06 GMT

அதிமுக மாவட்ட செயலாளர்

சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து பலி எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது. பலருக்கு கண் பார்வை போய் விட்டது.

பலருக்கு சிறுநீரகம் செயலிழந்து விட்டது. தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவம் நடந்த இடத்துக்கு முதல்- அமைச்சர் நேரில் செல்லவில்லை. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆறுதல் கூறியதோடு அவர்களது துயரத்தில் பங்கு கொண்டார்.

Advertisement

பள்ளி குழந்தைகளின் கல்வி செலவை அ.தி.மு.க. ஏற்றுக் கொள்ளும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தி.மு.க. அரசின் நிர்வாக திறன் இல்லாததாலும், முதல்- அமைச்சரின் அலட்சிய போக்கை கண்டித்தும் சேலம் கோட்டை மைதானத்தில் நாளை (திங்கட்கிழமை) அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் அனைத்து பிரிவு நிர்வாகிகளும், முன்னாள், இன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்பட கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News