வாக்குப்பதிவு இயந்திரங்கள் பரிசோதனை செய்யும் பணி
கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதி வாக்குபதிவிற்காக கூடுதலாக பெறப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை பரிசோதனை செய்யும் பணி நடைபெற்றது.
Update: 2024-04-07 03:32 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டம், தச்சூர் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கில் கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதி வாக்குப் பதிவிற்காக கூடுதலாக கடலூர் மாவட்டத்தில் இருந்து பெறப்பட்ட 360 வாக்குப் பதிவு இயந்திரங்கள் முதல் நிலை பரிசோதனை செய்வதற்காக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன்குமார் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் சேமிப்பு கிடங்கு திறக்கப்பட்டது,