கம்பம் : லாட்டரி சீட்டு விற்றவர் கைது

கம்பத்தில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Update: 2023-12-22 09:09 GMT

காவல் நிலையம் 

கம்பம் பட்டி சாலையில் கம்பம் வடக்கு காவல் நிலைய  காவல்துறையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த கம்பம் புது பள்ளிவாசல் தெருவை சேர்ந்த அப்பாஸ் என்பவரை கைது செய்தனர் மேலும் அவரிடம் இருந்து ரூபாய் 3400 மதிப்பிலான லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Tags:    

Similar News