ரூ.25 லட்சம் மதிப்புடைய நிலம் அபகரிப்பு - அலைக்கழிக்கப்படும் மூதாட்டி

நிலத்தை மீட்க பதிவாளர், கோட்டாட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் என அலையும் மூதாட்டி.

Update: 2024-03-13 14:10 GMT

மூதாட்டியின் ரூ.25 லட்சம் நிலம் அபகரிப்பு  

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மூதாட்டியின் ரூ.25 லட்சம் மதிப்புள்ள நிலம், ஆள் மாறாட்டம் செய்து வேறொரு நபருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் வளத்தீஸ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பட்டம்மாள் (86). இவருக்கு மூன்று மகள்கள், மூன்று மகன்கன் உள்ளன்ர். காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்துார் கண்ணகி நகர் பகுதியில் 1,562 சதுர அடி மனையை 1981ல் விலைக்கு வாங்கி, காஞ்சிபுரம் இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளார். தன் மூன்று மகள்களுக்கு பெயர் மாற்றம் செய்வதற்கு இரு ஆண்டுகளுக்கு முன்பாக மூதாட்டி முடிவு செய்தார்.

இதற்காக இரு ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தை அளப்பதற்காக சர்வேயர் வந்தார். அப்போது நிலம் வேறொருவரின்  பெயரில் பட்டா இருப்பதால் நிலத்தை அளக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். அப்போது தான்  ஆள்மாறாட்டம் செய்து, நிலம் அபகரிக்கப்பட்ட தகவல் மூதாட்டிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தெரிய வந்தது.

விசாரணையில் நிலத்தை விற்பனை செய்தவர்கள் தகவல் கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பட்டா, போலி பத்திரம் ஆகியவற்றை ரத்து செய்யக்கோரி மாவட்ட பதிவாளர், வருவாய் கோட்டாட்சியர், தாசில்தார் உள்ளிட்டோரிடம் மனு அளிக்கப்பட்டு, விசாரணையும் நடந்துள்ளது. ஆனால், இதுவரை போலி பத்திரம் மற்றும் பட்டாவை ரத்து செய்வதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை என மூதாட்டி வருத்தம் தெரிவித்து வருகிறார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரை சந்தித்தும் மனு கொடுத்துள்ளார். 

Tags:    

Similar News