கந்தசுவாமி கோவிலுக்கு ரூ. 75.94 லட்சம் வருவாய்

திருப்போரூர் கந்தசுவாமி கோவிலுக்கு கடைகளுக்கான பொது ஏலத்தில் ரூ. 75.94 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.

Update: 2024-06-15 05:31 GMT

திருப்போரூர் கந்தசுவாமி கோவில் 

திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், ஓராண்டுக்கான ஏலம், செங்கல்பட்டு மாவட்ட உதவி ஆணையர் லட்சுமி காந்த பாரதிதாசன், செயல் அலுவலர் குமரவேல் முன்னிலையில் நடந்தது. இதில், பிரசாத கடை 46.30 லட்சம் ரூபாய்க்கும், தற்காலிக கடை 1.50 லட்சம் ரூபாய்க்கும், வாகன நிறுத்தம் கட்டணம் 4.10 லட்சம் ரூபாய்க்கும் ஏலம் எடுக்கப்பட்டது. மேலும், ஆடு, கோழி சேகரித்துக்கொள்வதற்கான ஏலம், 83,000த்திற்கும், வெள்ளி உரு விற்பனை செய்வதற்கு 1.20 லட்சத்திற்கும், நெய் தீபம் விற்பனை 22.01 லட்சத்திற்கும் ஏலம் போனது. இதன் வாயிலாக, கந்தசுவாமி கோவிலுக்கு, முன் வருவாயாக 75.94 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது.

இதில், காணிக்கை தலைமுடி சேகரிப்பு உரிமம், சிதறு தேங்காய், உப்பு, மிளகு சேகரிப்பு உரிமம், குறைந்த தொகைக்கு கேட்கப்பட்டதால், அவற்றுக்கான பொது ஏலம் தள்ளிவைக்கப்பட்டது.

Tags:    

Similar News